ஆஸி., டெஸ்ட் தொடரில் ஆடுகிறார் ரவீந்திர ஜடேஜா.. க்ரீன் சிக்னல் கொடுத்த என்சிஏ

First Published | Feb 2, 2023, 5:13 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜா ஆடுவதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமி க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது.
 

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஜடேஜா ஆடவில்லை. ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜடேஜாவின் முழங்காலில் அறுவை சிசிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த ஜடேஜா, ஓய்வு முடிந்து பயிற்சி மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ஜடேஜா, அதற்கு முன்பாக ஃபிட்னெஸை நிரூபிக்கும், டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுக்கும் விதமாகவும், ரஞ்சி தொடரில் ஆடினார். 

SA vs ENG: பட்லர் அபார சதம்.. ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்.. கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

Tap to resize

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் சௌராஷ்டிரா அணி கேப்டனாக செயல்பட்டு பவுலிங்கில் அசத்தினார்.  பிப்ரவரி 9 முதல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ஜடேஜா ஆடலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது.
கோலியுடன் கம்பேர் பண்ற அளவுக்கு பாபர் அசாம் ஒரு ஆளே கிடையாது..! ரொம்ப நியாயமா பேசிய மிஸ்பா உல் ஹக்

ஜடேஜாவின் ஃபிட்னெஸை ஆய்வு செய்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் ரிப்போர்ட்டில் ஜடேஜா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஆட க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது. எனவே ஜடேஜா வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட்டில் ஆடுகிறார். இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜடேஜா ஆடுவது அவசியம். அவர் ஆடுவது இந்திய அணிக்கு பெரிய பலம். 
 

Latest Videos

click me!