2025 ஐபிஎல் சீசனில் முக்கிய பந்துவீச்சாளர்களுக்குக் காயம் ஏற்பட்டபோதிலும், முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது ஒரு பாசிட்டிவ்வான விஷயம் என்றும் கோயங்கா குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "எய்டன் மார்க்ரம் (13 போட்டிகளில் 445 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (13 போட்டிகளில் 627 ரன்கள்) ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கியது ஒரு துணிச்சலான முடிவு. அது அவர்கள் இருவருக்குமே சிறந்த ஐபிஎல் சீசனாக அமைந்தது. அதேபோல, புதுமுக வீரரான திக்வேஷ் ரதி, 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்து, எங்கள் அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராக உருவெடுத்தார்.
அணி திருப்தியளிக்கிறது
இருப்பினும், கடந்த சீசனில் எங்களிடம் ஒரு வலுவான பந்துவீச்சு யூனிட் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால் இந்த முறை, உள்நாட்டு இந்திய பந்துவீச்சாளர்களை வைத்து ஒரு வலுவான பந்துவீச்சுப் படையை உருவாக்கியிருக்கிறோம். இப்போது எங்களிடம் உள்ள அணி திருப்தியளிக்கிறது," என்றார்.