Vaibhav Suryavanshi: 15 வயசு சிறுவனிடம் வீரத்தை காட்டிய DC பவுலர்.. செக் வைத்த பிசிசிஐ!

Published : May 02, 2026, 06:15 PM IST

15 வயது இளம் பாலகன் வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு பிசிசிஐ கடும் வார்னிங் விடுத்துள்ளது.

PREV
13
வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய கைல் ஜேமிசன்

டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியின் வேகப்பந்து வீச்சாளரும், நியூசிலாந்து அணியை சேர்ந்தவருமான‌ கைல் ஜேமிசன், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியிருக்கிறார். இதற்காக, அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி (demerit point) வழங்கி ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 43வது போட்டியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான இந்தப் போட்டியின்போது, இரண்டாவது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷியை ஜேமிசன் அவுட்டாக்கினார். விக்கெட் எடுத்த பிறகு, பேட்ஸ்மேனை ஆத்திரமூட்டும் வகையில், அவர் அருகே சென்று ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பிசிசிஐ விடுத்த வார்னிங்

இது ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.5-ஐ மீறிய செயல். அதாவது, சக வீரரைச் சீண்டும் வகையிலான வார்த்தைகள், செய்கைகள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துவது குற்றமாகும். போட்டி நடுவர் ராஜீவ் சேத் விதித்த இந்தத் தண்டனையை, கைல் ஜேமிசன் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார். ஒரு சர்வதேச வீராராக இருந்து கொண்டு 15 வயது சிறுவனிடம் வீரத்தை காட்டிய கைல் ஜேமிசனை நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகினறனர்.

23
டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி

இந்தப் போட்டியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெல்லி கேப்பிடல்ஸ் அணி விரட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் (40 பந்துகளில் 75 ரன்கள்) மற்றும் பதும் நிசாங்கா (33 பந்துகளில் 62 ரன்கள்) ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்து மிரட்டலான தொடக்கத்தைக் கொடுத்தது. இறுதியில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (18*) மற்றும் அஷுதோஷ் ஷர்மா (25*) நிதானமாக ஆடி, ஐந்து பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தனர்.

33
மிட்ச்செல் ஸ்டார்க் சூப்பர் பவுலிங்

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் இதுவாகும். முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ரியான் பராக், இந்த சீசனில் தனது முதல் 50+ ஸ்கோரைப் பதிவு செய்து, 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய டோனோவன் ஃபெரெய்ரா, வெறும் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் அடித்து மிரட்டினார். டெல்லி அணி தரப்பில், காயத்திலிருந்து மீண்டு வந்த மிட்செல் ஸ்டார்க் 3 முக்கிய விக்கெட்டுகளை (3/40) வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம், டெல்லி அணி இந்த சீசனில் தனது நான்காவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories