நல்ல பிளேயரை சீரழித்துவிடாதீர்கள்..! ரோஹித்தை விளாசிய ஸ்ரீகாந்த்

First Published Aug 2, 2022, 4:30 PM IST

சூர்யகுமார் யாதவை ஓபனிங்கில் இறக்கி சீரழித்துவிடாதீர்கள் என்று இந்திய அணி நிர்வாகத்தை விளாசியுள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
 

இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அணி தேர்வு மிகச்சவாலாக இருக்கும். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை எதிர்நோக்கி ரசிகர்களும் மிகுந்த எதிர்பாப்புடனும் ஆர்வத்துடனும் உள்ளனர்.
 

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவரிசையில், பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி இறக்கிவிடுகிறது. 

இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக முதல் 2 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். ஓபனிங்கில் இறங்கிய சூர்யகுமார் யாதவ், முதல் போட்டியில் 16 பந்தில் 24 ரன்களும், 2வது போட்டியில் 6 பந்தில் 11 ரன்களும் அடித்து ஏமாற்றமளித்தார்.

இது அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்த கேப்டன் ரோஹித் சர்மா, எந்த பேட்ஸ்மேனுக்கும் இதுதான் அவரது பேட்டிங் ஆர்டர் என்றில்லாமல், அனைவரும் எந்த ஆர்டரிலும் இறங்கி ஆட தயாராக இருக்கவேண்டும் என்றும் அதற்காகத்தான் சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்திய அணியின் இந்த வியூகத்தை, குறிப்பாக சூர்யகுமாரை ஓபனிங்கில் இறக்கிவிட்டதை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?

இதுதொடர்பாக பேசிய ஸ்ரீகாந்த், சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையில் மிகச்சிறந்த வீரர். அவர் டி20 உலக கோப்பையில் 4ம் வரிசையில் தான் பேட்டிங் ஆடவேண்டும். அவரை ஏன் ஓபனிங்கில் இறக்குகிறீர்கள்? ஷ்ரேயாஸ் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷனை அணியில் எடுத்து அவரை ஓபனிங்கில் இறக்கலாம். சூர்யகுமார் யாதவ் மாதிரியான கிரிக்கெட்டரை சீரழித்துவிடாதீர்கள். இதை செய்ய வேண்டாம். 2 போட்டிகளில் மோசமாக ஆடியது அவரது தன்னம்பிக்கையை சிதைக்கும் என்றார் ஸ்ரீகாந்த்.
 

click me!