டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு அமீரகத்தில் தவறவிட்ட டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியாவில் தூக்கவேண்டும் என்ற உறுதியில் இருக்கிறது இந்திய அணி.
இந்த முறை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்தவர் ரோஹித் சர்மா. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் ரோஹித்.
ரோஹித் சர்மா தலைமையிலான டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. விராட் கோலி ஃபார்மில் இல்லாத நிலையில், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி எதுவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?
2011 உலக கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியை தேர்வு செய்தது ஸ்ரீகாந்த் தான். ஸ்ரீகாந்த்தும் இப்போதைய இந்திய அணியின் தலைமை சேத்தன் ஷர்மாவும் இந்தியாவிற்காக ஒரே காலக்கட்டத்தில் இணைந்து ஆடியவர்கள் என்பதால், நட்புடனும் உரிமையுடனும் சேத்தன் ஷர்மாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.