தீபக் ஹூடா இந்திய அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அசத்தியிருக்கிறார். அண்மையில் டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 விதமான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் ஆடியிருக்கிறார். அப்படியிருக்கையில், அவரை புறக்கணித்துவிட்டு, ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்த்ததை கடுமையாக சாடியுள்ளார் ஸ்ரீகாந்த்.