இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் சரியாக ஆடாத விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டது. அடுத்ததாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் அணியிலும் விராட் கோலி இடம்பெறவில்லை. ஃபார்மில் இல்லாத கோலி ஃபார்முக்கு வரவேண்டும் என்றால் நிறைய கிரிக்கெட் ஆடவேண்டும். ஆனால் ஃபார்மில் இல்லாத அவரை அணியில் எடுத்து ஆடவைக்காமல், அவருக்கு ஓய்வு மேல் ஓய்வு கொடுக்கப்படுகிறது. எனவே அவர் ஆசிய கோப்பைக்கான அணியிலும் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.