திருமணமான 10 நாட்களில் வலைபயிற்சியை தொடங்கிய புதுமாப்பிள்ளை!

Published : Feb 03, 2023, 05:59 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் புதிதாக திருமணமான கேஎல் ராகுல் தனது வலைபயிற்சியை தொடங்கியுள்ளார்.  

PREV
19
திருமணமான 10 நாட்களில் வலைபயிற்சியை தொடங்கிய புதுமாப்பிள்ளை!
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது.

பார்டர் கவாஸ்கர் டிராபி - ஒரேயொரு முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா!

29
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. மாறாக, குடும்பக் கடமைகள் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.
 

39
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி மஞ்சள் பூசும் விழா

இதையடுத்து, கேஎல் ராகுலுக்கும், சுனில் ஷெட்டியின் மகளும் பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி திருமணம் நடந்தது. மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து அதியா ஷெட்டி - கேஎல் ராகுல் திருமணம் நடந்தது.

49
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி மெஹந்தி விழா

திருமணத்திற்கு முன்னதாக மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியும் நடந்தது. திருமணத்தைத் தொடர்ந்து மஞ்சள் பூசும் ஹஸ்தி விழாவும் சிறப்பாக நடந்தது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக வெளியில் சென்று வந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.

59
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்

இந்த நிலையில், வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். 

69
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்

இதன் காரணமாக திருமணத்தை முடித்த கையோடு நாக்பூர் வந்த கேஎல் ராகுல் அங்கு வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மட்டுமின்றி அவருடன் இணைந்து விராட் கோலி, சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

79
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்

கேஎல் ராகுலைப் போன்றே புதுமாப்பிள்ளையான அக்‌ஷர் படேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார். 

89
கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

99
கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு நடக்கும் என்று சுனில் ஷெட்டி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

கோலிக்குப் பதில் இவர் தான் கரெக்டா இருப்பார் - தினேஷ் கார்த்திக் டெசிஷன்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories