டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டெரில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் 31 ரன்கள் எடுத்தபோது இந்த சாதனையைப் ஜோ ரூட் படைத்தார்.
இதன் மூலம் அவரது ரன்கள் 13,290 ஆக உயர்ந்துள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் (13288), முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸ் (13289) ஆகியோரை ரூட் முந்தியுள்ளார். இது ரூட்டின் 157வது டெஸ்ட் போட்டியாகும்.
24
ஜோ ரூட் சாதனை
இந்தப் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (15,921) முதல் இடத்தில் உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (13,378) இரண்டாவது இடத்தில் இருக்கிறார். லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டில் சதம் அடித்த ரூட், இந்தியாவுக்கு எதிராக 11 சதங்களைப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்துள்ளார்.
34
60 இன்னிங்ஸ்களில் 11 சதங்கள்
ரூட் 60 இன்னிங்ஸ்களில் 11 சதங்கள் அடித்துள்ளார், ஸ்மித் 46 இன்னிங்ஸ்களில் 11 சதங்கள் அடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூட்டின் 20வது டெஸ்ட் சதம் மற்றும் இந்த ஆண்டின் முதல் சதம் இதுவாகும். 2021, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தலா ஆறு சதங்கள் அடித்த ரூட், 2023ல் இரண்டு சதங்கள் அடித்தார். லார்ட்ஸில் அடித்தது ரூட்டின் தொடர்ச்சியான மூன்றாவது மற்றும் வாழ்க்கையில் எட்டாவது சதமாகும்.
இதற்கு முன்பாக முந்தைய இரண்டு டெஸ்ட்களில் ஜோ ரூட் 143 மற்றும் 103 ரன்கள் எடுத்தார். லார்ட்ஸில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்த மூன்றாவது வீரர் ரூட். 1912-26ல் ஜாக் ஹோப்ஸ், 2004-05ல் மைக்கேல் வாகன் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டிலும் ஜோ ரூட் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். 71 ரன்கள் எடுத்து அவர் ஆடி வருகிறார்.