மாபெரும் வீரன்! காலில் காயத்துடன் விளையாடி உலக சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

Published : Jul 24, 2025, 11:10 PM IST

காலில் காயத்துடன் விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பண்ட் பெரும் சாதனை படைத்தார். 

PREV
14
Rishabh Pant World Record In World Test Championship,

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அதாவது ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 38 போட்டிகளில் 2717 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணியின் ஓடிஐ கேப்டன் ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 40 போட்டிகளில் இந்த ரன்களை எடுத்த நிலையில், ரிஷப் பண்ட் அதை முறியடித்துள்ளார். அதுவும் காலில் அடிப்பட்ட காயத்துடன் பேட்டிங் செய்த அவர் இந்த மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

24
ரிஷப் பண்ட் காயம்

4வது டெஸ்ட் போட்டியின் நேற்றைய முதல் நாளில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதாவது அவர் 48 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயன்றபோது அந்த பந்து ரிஷப் பண்ட்டின் வலது காலின் ஷுவுக்கு மேல் நேரடியாக தாக்கியது. இதனால் அவர் வலியால் கதறி துடித்தார். உடனடியாக ஷூவை

34
ரன் வேட்டையில் பண்ட் சாதனை

இதனால் ரிஷப் பண்ட் வலியால் அலறி துடித்தபடி கோல்ஃப் வண்டி 'ஆம்புலன்ஸ்' மூலம் அழைத்து செல்லப்பட்டார். இதனால் ரிஷப் பண்ட் இன்று 2ம் நாளில் மீண்டும் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டாம் நாளில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ரிஷப் பண்ட் களமிறங்கினார். ஷர்துல் தாக்கூர் விக்கெட் இழந்ததை அடுத்து பண்ட் களமிறங்கினார். 

தொடக்கத்தில் நிதானமாக விளையாடி வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவளிக்க முயன்ற அவர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த பிறகு சிக்ஸர் மற்றும் ஃபோர்கள் அடித்து அரைசதம் கடந்து ரன் வேட்டையில் சாதனை படைத்தார்.

44
இங்கிலாந்தில் கலக்கும் ரிஷப் பண்ட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 46 போட்டிகளில் 2617 ரன்கள் எடுத்த விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். சுப்மன் கில் (36 போட்டிகளில் 2512), ரவீந்திர ஜடேஜா (43 போட்டிகளில் 2232), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (23 போட்டிகளில் 2089), கே.எல். ராகுல் (28 போட்டிகளில் 1773) ஆகியோர் முதல் ஏழு இடங்களில் உள்ளனர்.

 இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ரிஷப் பண்ட், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டுகளில் அரைசதங்கள் அடித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories