IND vs ENG 4th Test: இங்கிலாந்தில் தெறிக்க விட்ட தமிழன்! 89 ஆண்டு சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!

Published : Jul 24, 2025, 05:01 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டில் இந்திய வீரர் சாய் சுதர்சன் 89 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 

PREV
14
ND vs ENG Test: Sai Sudarshan Breaks 89 Year Old Record

மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 61 ரன்கள் எடுத்த இந்திய வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் 89 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 

அதாவது 1936 ஆம் ஆண்டில், முன்னாள் இந்திய வீரர் கோட்டர் ராமசாமி மான்செஸ்டரில் 3வது இடத்தில் பேட்டிங் செய்து 60 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்சன் 61 ரன்கள் எடுத்து ராமசாமியை முறியடித்து இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

24
சாதனை பட்டியலில் இணைந்த சாய் சுதர்சன்

இந்தப் பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அப்பாஸ் அலி பெய்க் முதலிடத்தில் உள்ளார். 1959 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தபோது 112 ரன்கள் எடுத்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. 1990 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் அவர் 93 ரன்கள் எடுத்தார். இப்போது சாய் சுதர்ஷனின் பெயரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

34
கங்குலி சாதனையையும் முறியடித்தார்

இதேபோல் சாய் சுதர்ஷன் மற்றொரு சாதனையையும் படைத்தார். முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கு மேல் விளையாடிய இரண்டாவது இடது கை பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 2002 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக சவுரவ் கங்குலி 284 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தார். 

இப்போது இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்ஷன் 151 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து மற்றொரு புதிய வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

44
புஜாரா இடத்துக்கு பொருந்துவார்

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்ஷன் மற்றொரு சாதனையைப் படைத்தார். அதாவது 2023 முதல் சொந்த நாட்டிற்கு வெளியே ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளை விளையாடிய முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆனார். இதற்கு முன்பு இந்த சாதனை 75 பந்துகளாக இருந்தது. மேலும் 28 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, ஒரு பேட்ஸ்மேன் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து அரைசதம் அடித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories