IND vs ENG 2nd Test: பும்ராவின் இடத்தை பிடிக்கும் மேட்ச் வின்னர்! இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!

Published : Jun 30, 2025, 05:03 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் உத்தேச பிளேயிங் குறித்து பார்ப்போம்.

PREV
13
India vs England 2nd Test: Indian Team Playing 11

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி (நாளை மறுநாள்) எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

23
பும்ராவுக்கு ஓய்வு?

முதலாவதாக இந்திய அணியின் முன்னணி பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியிலும் அதிக ஓவர்கள் வீசினார். இதனால் அவருக்கு இரண்டாவது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

ஷர்துல் தாக்கூர் நீக்கம்

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் பவுலிங்கில் ரன்களை வாரி வழங்கியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சொதப்பிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் அதிரடியாக நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்திய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இடம்பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் மட்டுமின்றி மித வேகப்பந்தும் வீசக்கூடியவர்.

33
குல்தீல் யாதவ் உள்ளே வருகிறார்

எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அங்கு நல்ல வெயில் அடிக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சுக்கு பிட்ச் கைகொடுக்கலாம். எனவே, குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம். அவர் ஸ்பின் பவிலிங்கில் அதிக வேரியேஷன் கொண்டு வருபவர். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் அல்லது ஒரு பேட்ஸ்மேனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

பும்ராவின் இடத்தை பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்

ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்படலாம். இதில் அர்ஷ்தீப் சிங்குக்கே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழும் அர்ஷ்தீப் சிங் வேகம், ஸ்லோ பால் என மாற்றி மாற்றிப் போடுவார். 

மேலும் இடதுகை பவுலர் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் எளிதில் எதிர்கொள்வது கடினம். மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories