இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் சாதனையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முறியடித்தார். இரண்டாவது நாளின் தொடக்கத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை தனது அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார்.
24
கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா
இந்த விக்கெட்டை வீழ்த்தியவுடன் இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் கபில் தேவ்வை பும்ரா முந்தினார். மூன்றாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு பும்ரா 42 விக்கெட்டுகளுடன் கபில் தேவுக்கு பின்னால் இருந்தார். முதல் நாளில் ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி 1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ்வின் சாதனையை அவர் சமன் செய்தார். மேலும் ஸ்டோக்ஸை அவுட் செய்து கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.
இங்கிலாந்து மண்ணில் சாதித்த பவுலர்கள்
இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் இஷாந்த் சர்மா முதலிடத்தில் உள்ளார். அவர் 15 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தில் 11 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கபில் தேவ் 13 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில் பும்ரா இந்த சாதனையை முறியடித்துள்ளார். பும்ரா ஏற்கெனவே லீட்ஸீல் நடந்த முதல் டெஸ்ட்ட்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார்.
34
சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகள்
அதாவது சேனா (SENA) நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். சேனா நாடுகளில் மொத்தம் 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, 146 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார்.
பும்ரா அதிகம் வெற்றி பெற்ற சேனா நாடு ஆஸ்திரேலியா. இங்கு 12 டெஸ்ட்களில் 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி: 17.15, சிறந்த பந்துவீச்சு 6/33 விக்கெட்டுகள். நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மொத்தம் 32 விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா, சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை செய்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய பும்ரா, 2வது இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. பாக்கிங்காமில் நடந்த 2வது டெஸ்ட்டில் அவர் விளையாடவில்லை. அப்படி விளையாடி இருந்தால் இஷாந்த் சர்மாவின் சாதனையையே முறியடித்து இருப்பார்.