IND vs ENG: வலியால் துடித்தபடி வெளியேறிய ரிஷப் பண்ட்! இந்திய அணிக்கு சிக்கல்! பேட்டிங் செய்வாரா?

Published : Jul 10, 2025, 10:04 PM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். இதனால் அவர் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
14
India-England 3rd Test! Rishabh Pant injured

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதாவது இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது 34வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா ஒரு பந்தை லெக் சைட் திசை நோக்கி வீசினார்.

24
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா?

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், வர்ணனையின் போது, ''பந்து தாக்கியதில் ரிஷப் பண்ட்டின் விரல் நகம் சற்று உடைந்துள்ளது. ஆனால் விரலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை. அவருக்கு தற்போது ஐஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று அப்டேட் கொடுத்தார். ரிஷப் பண்ட்டின் காயம் பெரிதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காயத்தின் தனமை என்ன?

காயத்தின் தன்மை தீவிரமாக இல்லை என்று தகவல் வெளியாகி இருந்தாலும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அவரது காயத்தின் தனமை என்ன? அவரால் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற விவரங்கள் தெரியவரும். ஒருவேளை ரிஷப் பண்ட்டால் பேட்டிங் செய்ய முடியாமல் போனால் இந்திய அணி 9 வீரர்களை வைத்து மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். மாற்று வீரர் துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டாலும் அவரால் பேட்டிங் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

34
இந்திய அணி சூப்பர் பவுலிங்

முன்னதாக, 3வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் சாக் க்ரொலி இந்திய அணியின் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார்கள். வழக்கமாக அதிரடியாக ஆடும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த டெஸ்ட்டில் தொடக்கம் முதல் நிதானம் காட்டினார்கள்.

அடுத்தடுத்து 2 விக்கெட்

ஸ்கோர் 43 ஆக உயர்ந்தபோது இங்கிலாந்து அடுத்தடுத்து முதல் 2 விக்கெட்டை இழந்தது. அதாவது நிதிஷ் குமார் ரெட்டியின் முதல் ஓவரின் 2வது பந்தில் பென் டக்கெட் 23 ரன் எடுத்து ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் சாக் க்ரொலியும் 18 ரன்னில் பண்ட்டிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 44/2 என தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும், ஆலி போப்பும் அணியை மீட்டனர்.

44
ஹாரி ப்ரூக் பும்ரா பந்தில் அவுட்

இருவரும் நிதானமாக பொறுப்பாக விளையாடி ரன்களை சேகரித்தனர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில், தேநீர் இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் ஆலி போப் 44 ரன்னில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார். 

அடுத்து வந்த ஹாரி ப்ரூக்கும் 11 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து அணி 172/4 என பரிதவித்தது. பின்னர் பென் ஸ்டோக்ஸும், ஜோ ரூட்டும் இணைந்து விளையாடி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories