IND vs ENG: அந்த 'பேஸ்பால்' எங்கப்பா? இங்கிலாந்து ஆமை வேக ஆட்டம்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published : Jul 10, 2025, 11:52 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் பேஸ்பால் அதிரடி ஆட்டத்துக்கு பதிலாக நிதானமாக ஆடிய இங்கிலாந்து அணியை ரசிகர்கள் கிண்டல் செய்தனர். 

PREV
14
IND vs ENG: England Played Very Calmly On The Frst Day Of The 3rd Test

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் சாக் க்ரொலி இந்திய அணியின் சரியான லைன் அண்ட் லெந்த் பந்துவீச்சின் காரணமாக ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள்.

24
இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்

ஸ்கோர் 43 ஆக உயர்ந்தபோது முதல் விக்கெட் விழுந்தது. 23 ரன் எடுத்த பென் டக்கெட் நிதிஷ் குமார் ரெட்டியின் முதல் ஓவரின் 2வது பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் சாக் க்ரொலியும் 18 ரன்னில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 44/2 என தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும், ஆலி போப்பும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அடுத்த‌டுத்து 2 விக்கெட்

பொறுமையாக விளையாடி இவருன் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில், தேநீர் இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் ஆலி போப் 44 ரன்னில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக்கும் 11 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து அணி 172/4 என மீண்டும் நெருக்கடியில் சிக்கியது. இதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட்டும், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து மீட்டனர்.

34
இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள்

பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா மாறி மாறி சரியான திசையில் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்த போதிலும் இருவரும் நிதானமாக ஒன்றிரண்டு ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த ஜோ ரூட் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டு விரட்டியடித்தார். மறுபக்கம் ஸ்டோக்ஸ் மிக நிதானமாக விளையாடினார். 

கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவரில் 4 விக்கெட் இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டும், ஜடேஜா, பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

44
எங்கே அந்த பேஸ்பால்?

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் 'பேஸ்பால்' எனப்படும் அதிரடி ஆட்டத்தை ஆடும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இன்று இந்திய பவுலர்களின் சூப்பர் பவுலிங்கால் ரன்கள் அடிக்க முடியாமல் திணறுவதை பார்க்க முடிந்தது. நமது பவுலர்கள் ஸ்டெம்புகளை குறிவைத்து சரியான திசையில் பந்துவீசியதால் அவர்களால் போதிய ரன்கள் சேர்க்க முடியவில்லை. 

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் ஓவருக்கு 4.5 ரன் ரேட்டில் விளையாடும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இன்று ஓவருக்கு 3.02 ரன் ரேட்டிலேயே விளையாடி இருக்கின்றனர். எந்த நிலையிலும் பேஸ்பால் ஆட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். இன்று அந்த பேஸ்பால் எங்கப்பா? என்று நெட்டிசன்கள் இங்கிலாந்து அணியை கலாய்த்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories