IPL: மீண்டும் பழைய முறைக்கு திரும்பும் ஐபிஎல்..! கன்ஃபாம் பண்ண கங்குலி.. உற்சாகத்தில் ஐபிஎல் அணிகள்

First Published Sep 22, 2022, 2:55 PM IST

ஐபிஎல்லில் ஹோம் & அவே ஃபார்மட்டில் மீண்டும் அடுத்த சீசனிலிருந்து ஆடப்படவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிற்கு வெளியேயும், இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கடந்த 2 சீசனில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சீசனிலிருந்து மீண்டும் பழைய முறை திரும்புகிறது.
 

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். அதில் ஒருமுறை தங்களது ஹோம் கிரவுண்டிலும், மற்றொரு முறை எதிரணியின் மைதானத்திலும் ஆடும். எடுத்துக்காட்டாக சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸுடன் மோதும் 2 போட்டிகளில், ஒரு போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திலும், மற்றொரு போட்டி மும்பை வான்கடேவிலும் நடக்கும்.
 

எனவே அதிகமான போட்டிகளை தங்களது ஹோம் கிரவுண்டில் ஆடுவதால் தங்கள் ஹோம் கிரவுண்ட் ஆடுகளம் மற்றும் கண்டிஷனுக்கு ஏற்ப அணிகள் வீரர்களை தேர்வு செய்வது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 சீசன்கள் நடத்தப்பட்ட விதம் வித்தியாசமானது.

இதையும் படிங்க - அவர்தான் உங்க எதிர்காலம்.. இந்திய அணியின் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஈசியா தீர்வு சொன்ன மேத்யூ ஹைடன்
 

2021 ஐபிஎல் சீசன் முழுவதுமாக ஐக்கிய அரபு அமீரகத்திலும், 2022 ஐபிஎல்லின் முதல் பாதி மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னையிலும், 2ம் பாதி அமீரகத்திலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த சீசனை பழைய மாதிரி ஹோம் & அவே ஃபார்மட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.
 

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் புதிதாக இணைந்திருப்பதால் 10 அணிகள் மோதும் லீக் தொடராக ஐபிஎல் லீக் தொடர் அமைந்துள்ளது. அடுத்த சீசனிலிருந்து 10 அணிகளும், ஒவ்வொரு எதிரணிக்கெதிரான தலா ஒரு போட்டி வீதம் மொத்தம் 9 போட்டிகளை ஹோம் கிரவுண்டில் ஆடும். 

இதையும் படிங்க - IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு அவங்கதான் காரணம்.! கேப்டன் ரோஹித் சர்மா கடும் தாக்கு

அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. அடுத்த ஐபிஎல் சீசன் சற்று முன்னதாகவே தொடங்கப்படும் என தெரிகிறது.

click me!