அவரை கண்டிப்பா இந்திய அணியில் எடுத்திருக்கணும்! உலக கோப்பை வின்னிங் டீமை தேர்வுசெய்த முன்னாள் தேர்வாளர் அதிரடி

First Published Sep 13, 2022, 3:37 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமியை கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும் முன்னாள் தலைமை தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 4 வீரர்கள் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டனர்.
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி! ஷமியின் அருமை தெரிந்தும் கழட்டிவிட இதுதான் காரணம்
 

சீனியர் ஃபாஸ்ட் பவுலரான முகமது ஷமி மெயின் அணியில் எடுக்கப்படாமல் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டது முன்னாள் வீரர்கள் பலர் மற்றும் ரசிகர்களுக்கும் அதிருப்தி. ஆனால் ஆடும் லெவன் காம்பினேஷனை கருத்தில்கொண்டு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்படி பார்க்கையில், பவர்ப்ளே பவுலராக புவனேஷ்வர் குமாரும், டெத் பவுலர்களாக பும்ரா, ஹர்ஷல் படேலும் பந்துவீசவுள்ளனர். எனவே ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்பதால் அவரை மெயின் அணியில் எடுக்கவில்லை.

ஆனால் நல்ல பவுன்ஸுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் முகமது ஷமி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலர். ஹர்ஷல் படேல் நல்ல பவுலர் தான் என்றாலும், முகமது ஷமி கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட்டுக்கு அவர் எந்தவிதத்தில் குறைச்சல்? இந்திய அணி தேர்வை கண்டு டுவிட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்
 

2011ல் ஒருநாள் உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அந்த உலக கோப்பைக்கு தோனி தலைமையிலான இந்திய அணியை தேர்வு செய்தது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!