T20 World Cup: அவங்க 2 பேருக்கு பதிலா இவங்க 2 பேர் தான் என் சாய்ஸ்! இந்திய அணி தேர்வை விமர்சிக்கும் அசாருதீன்

First Published Sep 13, 2022, 2:55 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தன் மனதில் பட்ட 2 மாற்றங்களை தெரிவித்துள்ளார் முகமது அசாருதீன்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் மற்றும் 4 ஸ்டாண்ட்பை வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - நீ நல்ல பேட்ஸ்மேன் தான்.. ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு நீ சரிப்பட்டு வரமாட்ட..! தூக்கி எறியப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்
 

இந்திய அணி தேர்வு ஆடும் லெவனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முகமது  ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் திறமையான வீரர்களாக இருந்தாலும், ஆடும் லெவன் காம்பினேஷனில் அவர்களது இடங்களை முறையே புவனேஷ்வர் குமார்  மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பிடித்துவிட்டதால் ஆடும் லெவனில் அவர்களுக்கு எப்படியும் இடம் இல்லை என்பதால் அவர்கள் மெயின் அணியில் எடுக்கப்படாமல் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி! ஷமியின் அருமை தெரிந்தும் கழட்டிவிட இதுதான் காரணம்

ஆனால் ஷமி  மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை முறையே ஹர்ஷல் படேல்  மற்றும் தீபக் ஹூடாவிற்கு பதிலாக எடுத்திருக்கலாம். நானாக இருந்தால் அப்படித்தான் எடுத்திருப்பேன் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
 

click me!