டி20 உலக கோப்பை: இந்திய அணியின் ஆடும் லெவனில் ராகுலுக்கு இடம் இல்லை..?

First Published Sep 11, 2022, 8:54 PM IST

டி20 உலக கோப்பைக்கான தன்னுடைய இந்திய அணியின் ஆடும் லெவனில் கேஎல் ராகுலுக்கு இடம் இல்லை என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். 
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.
 

இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்யும் விதமாக நிறைய பரிசோதனைகளை செய்துவரும் இந்திய அணி, ஆசிய கோப்பையிலும் ஏகப்பட்ட பரிசோதனைகளை செய்தது. அதன்விளைவாகவே ஆசிய கோப்பையில் தோல்வியையும் தழுவியது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை தோல்விக்கு இதுதான் காரணம்..! ரோஹித், டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்
 

அடுத்துவரும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களில் தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் 11-12 வீரர்களை மட்டுமே வைத்து வலுவான அணி காம்பினேஷனை முயற்சி செய்து அந்த அணியின் மீது நம்பிக்கை வைத்து டி20 உலக கோப்பைக்கான காம்பினேஷனை உறுதி செய்யவேண்டும் என்பதே பல முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது.
 

விராட் கோலி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஓபனிங்கில் இறங்கி அபாரமாக பேட்டிங்  ஆடி சதமடித்தது, அவரையே டி20 உலக கோப்பையிலும் தொடக்க வீரராக இறக்கலாம் என்ற கருத்து வலுத்துள்ளது. அதை இந்திய அணி நிர்வாகமும் யோசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கோலி ரோஹித்துடன் ஓபனிங்கில் இறங்கும்பட்சத்தில் ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமாகிவிடும். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை
 

அதேபோல சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி ஆடுவது குறித்த விவாதமும் நடந்துவரும் நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஆர்பி சிங்,  டி20 உலக கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் வலுவான காம்பினேஷனுடன் ஆடி நிறைய மாற்றங்களை செய்யாமல் டி20 உலக கோப்பைக்கான காம்பினேஷனை உறுதி செய்யவேண்டும். நல்ல வேகம் மற்றும் பவுன்ஸை தனது பவுலிங்கில் பெற்று, அதையே தனது பலமாகவும் பெற்றிருக்கும் ஷமி கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவேண்டும். நான் குல்தீப் யாதவையும் எடுப்பேன். ஆனால் கேஎல் ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!