டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

First Published Sep 10, 2022, 3:14 PM IST

டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
 

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு கடும் போட்டி நிலவுவதால், உலக கோப்பைக்கான இந்திய அணியை ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அணியை தேர்வு செய்தும்வருகின்றனர்.

இதையும் படிங்க - சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆரோன் ஃபின்ச் ஓய்வு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ராகுல், கோலி, ரிஷப், சூர்யகுமார், ஹர்திக், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா ஆகியோரை எடுத்துள்ளார். 
 

காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள ஜடேஜா, டி20 உலக கோப்பையில் சந்தேகம். ஆனாலும் ஜடேஜாவை தனது அணியில் தேர்வு செய்துள்ளார் நெஹ்ரா.

ஸ்பின்னர்களாக ஜடேஜாவுடன், அஷ்வின், சாஹல் ஆகியோரையும், ஃபாஸ்ட்  பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் நெஹ்ரா. 

இதையும் படிங்க - கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் காயமடைந்த ஜடேஜா..! ரோஹித், டிராவிட் செம கடுப்பு.. பிசிசிஐ அதிருப்தி

கடந்த டி20 உலக கோப்பைக்கு பின் ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் கூட ஆடிராத முகமது ஷமி, டி20 அணிக்கான திட்டத்தில் இல்லை என்று தேர்வாளர்களே குறிப்பிட்டுவிட்ட நிலையில், அவரை எடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து கூறுகின்றனர். ஆனால் ஷமியை நெஹ்ரா தனது அணியில் தேர்வு செய்யவில்லை.
 

ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு செய்த  டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், தீபக் ஹூடா.
 

click me!