பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

First Published Sep 6, 2022, 3:03 PM IST

ஐபிஎல்லில் ஒருகாலத்தில் கோலோச்சிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். அவர் ஐபிஎல்லில் இருந்து விலகியதற்கான காரணத்தை பார்ப்போம்.
 

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. தோனி தலைமையிலான இந்திய அணியில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் ரெய்னா. 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள், 78 டி20 போட்டிகளில் ஆடி முறையே 768, 5615 மற்றும் 1604 ரன்களை குவித்துள்ளார் ரெய்னா.
 

அபாரமான பேட்ஸ்மேன் ரெய்னா. அதிரடியாக ஆடக்கூடியவர். 2011ல் உலக கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்தவர். 

இதையும் படிங்க - Asia Cup: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி.. ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுவது எப்படி..? இதோ ரூட்மேப்

ஆனால் ஷார்ட் பிட்ச் பந்துகளை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் திணறினார் ரெய்னா. ரெய்னாவின் பலவீனம் ஷார்ட் பிட்ச் பந்துகள் தான் என்பதை அறிந்த எதிரணிகள், அவரை ஷார்ட் பிட்ச் பந்துகளின் மூலம் வீழ்த்த ஆரம்பித்தனர். தனது பலவீனம் என்னவென்பதை தெரிந்தும் கூட, ரெய்னாவால் அதை சரிசெய்ய முடியவில்லை. அதன்விளைவாக, 2018ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தோனியுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ரெய்னா.

ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் மட்டும் ஆடுவதாக முடிவெடுத்தார். ஆனால் 2020 ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து மோதலால் அந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே துபாயிலிருந்து கிளம்பி இந்தியாவிற்கு வந்தார். அதன்பின்னர் சிஎஸ்கே அணியிலிருந்தும் கழட்டிவிடப்பட்டார்.

ஐபிஎல்லில் 205 போட்டிகளில் ஆடி 5528 ரன்களை குவித்த ரெய்னா, ஐபிஎல்லின் டாப் வீரராக ஒரு கட்டத்தில் கோலோச்சினார். 

சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாகவும் தோனியின் தளபதியாகவும் திகழ்ந்த ரெய்னா, சின்ன தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 

இப்போது ஐபிஎல்லிலும் புறக்கணிக்கப்பட்ட ரெய்னா, ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்தார். இனிமேல் ஐபிஎல்லில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை அறிந்த ரெய்னா ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்தார். அத்துடன் சேர்த்து உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.

இதையும் படிங்க - Asia Cup: மருத்துவமனையில் ரிஸ்வான்.. பாகிஸ்தானுக்கு பாதிப்பு
 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கப்படுவதில்லை. பிசிசிஐயுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் முடித்துக்கொண்டால், இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கப்படுவார்கள். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் வரும் ஜனவரி புதிதாக பிரம்மாண்டமாக அறிமுகமாகிறது. அதுபோக இன்னும் பல டி20 லீக் தொடர்களிலும் ஆடமுடியும். அதனால் தான் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடும் நோக்கில் தான் ஐபிஎல் மட்டுமல்லாது உள்நாட்டு போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார் ரெய்னா.
 

click me!