Asia Cup: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி.. ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுவது எப்படி..? இதோ ரூட்மேப்

First Published Sep 5, 2022, 12:24 PM IST

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணி, ஃபைனலுக்கு முன்னேறுவது எப்படி என்று பார்ப்போம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
 

சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் மோதும். அந்தவகையில், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை  வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - நீ கோட்டை விட்டது கேட்ச்சை இல்லடா;மேட்ச்சை! அர்ஷ்தீப் சிங் மீது செம கடுப்பான கேப்டன் ரோஹித் சர்மா!வைரல் வீடியோ
 

நேற்று துபாயில் நடந்த போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. லீக் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணியை பழிதீர்த்தது பாகிஸ்தான்.

இதையும் படிங்க - அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானியா..? விக்கிபீடியாவிடம் விளக்கம் கேட்கும் இந்திய ஐடி அமைச்சகம்

ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமானால், அடுத்த 2 போட்டிகளில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்த வேண்டும்.

click me!