தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர்..? ராகுல் டிராவிட் ஓபன் டாக்

First Published Sep 4, 2022, 7:00 PM IST

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. லீக் சுற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. 
 

சூப்பர்  4 சுற்றில் இன்று நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், லீக் சுற்றில்  அடைந்த தோல்விக்கு இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.

இதையும் படிங்க - அந்த 4 எழுத்து வார்த்தைய சொல்லணும்னு தோணுது.. ஆனால் சொல்லமாட்டேன்! பிரஸ்மீட்டில் புதிர் போட்ட ராகுல் டிராவிட்

இந்த போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியில் பெரிய கேள்வியாக உள்ள தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ளார். 

இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில், அதாவது 6வது பேட்டிங் ஆர்டரில்  ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம் உள்ளது. அந்த ஒருவர் யார் என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடினார். ரிஷப் பண்ட் உட்காரவைக்கப்பட்டார். ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். ஆனால் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே ஆடினர்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை தோல்வி எதிரொலி.. திடீரென ஓய்வு அறிவித்தார் முஷ்ஃபிகுர் ரஹீம்

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், இந்திய அணியில் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கண்டிஷன், சூழல், எதிரணி ஆகியவற்றிற்கு ஏற்ப வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ஆடுகிறோம். எனவேஎ முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பரெல்லாம் கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிராக தினேஷ் கார்த்திக் ஆடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அதனால் லீக் போட்டியில் அவரை இறக்கினோம் என்றார் டிராவிட்.
 

click me!