டி20 உலக கோப்பையில் ஜடேஜா..? ரசிகர்களை குஷிப்படுத்திய ராகுல் டிராவிட்டின் அப்டேட்

First Published Sep 4, 2022, 3:55 PM IST

காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலும் ரவீந்திர ஜடேஜா ஆடமாட்டார் என்று தகவல் வெளிவந்திருந்த நிலையில், அதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. ஸ்பின் பவுலிங், அதிரடி பேட்டிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர் ஜடேஜா.

ஆசிய கோப்பையில்  பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 29 பந்தில் 35 ரன்கள்  அடித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக அவரை ஒத்த இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க - IND vs PAK: தம்பி நீயெல்லாம் சரியா வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்
 

இந்நிலையில், முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருப்பதால், டி20 உலக கோப்பையிலும் ஜடேஜா ஆடுவது சந்தேகம். அக்டோபர் 16லிருந்து நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் ஜடேஜா ஆடுவது சந்தேகம் என்று தகவல் வெளியானது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை தோல்வி எதிரொலி.. திடீரென ஓய்வு அறிவித்தார் முஷ்ஃபிகுர் ரஹீம்

இந்நிலையில், ஜடேஜா டி20 உலக கோப்பையில் ஆடுவது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், ஜடேஜா முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளார். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். டி20 உலக கோப்பைக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. எனவே அதற்குள்ளாக இப்போதே, அவர் டி20 உலக கோப்பையில் ஆடுவதும் ஆடாததும் குறித்து உறுதியாக கருத்து கூற முடியாது.  டி20 உலக கோப்பைக்கு இன்னும் 6-7 வாரங்கள் இருப்பதால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் ராகுல் டிராவிட். 
 

click me!