டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகிய ரவீந்திர ஜடேஜா..! இந்திய அணிக்கு மரண அடி

First Published Sep 3, 2022, 8:54 PM IST

காயத்தால் ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ரவீந்திர ஜடேஜா டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகியுள்ளார். 
 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. ஸ்பின் பவுலிங், அதிரடி பேட்டிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர் ஜடேஜா.

ஆசிய கோப்பையில்  பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 29 பந்தில் 35 ரன்கள்  அடித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். 

இதையும் படிங்க - நீ நாட் அவுட்டா போவதால் டீமுக்கு என்ன யூஸ்.? அரைசதம் அடித்தும் வாசிம் அக்ரமிடம் திட்டு வாங்கிய முகமது ரிஸ்வான்
 

ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக அவரை ஒத்த இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார்.
 

இந்நிலையில், முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருப்பதால், டி20 உலக கோப்பையில் ஜடேஜா ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது. அக்டோபர் 16லிருந்து நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை  நடக்கவுள்ளது. அதற்குள்ளாக ஜடேஜா காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து முழு ஃபிட்னெஸுடன் டி20 உலக கோப்பையில் ஆடமுடியாது. எனவே டி20 உலக கோப்பையிலிருந்தும் ஜடேஜா விலகியுள்ளார். 

இதையும் படிங்க - IPL: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரயன் லாரா நியமனம்
 

மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா அணியில் இருப்பது அணியின் பேலன்ஸுக்கு வலுசேர்க்கும். அவர் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். அவருக்கு மாற்று வீரராக யார் அறிவிக்கப்பட்டாலும், அவரால் ஜடேஜாவின் இடத்தை நிரப்பமுடியாது.

click me!