நீ நாட் அவுட்டா போவதால் டீமுக்கு என்ன யூஸ்.? அரைசதம் அடித்தும் வாசிம் அக்ரமிடம் திட்டு வாங்கிய முகமது ரிஸ்வான்

First Published | Sep 3, 2022, 6:41 PM IST

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானின் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான வாசிம் அக்ரம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.
 

இந்த தொடரின் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கிடம் ஜெயித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானின் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்துள்ளார் வாசிம் அக்ரம்.

இதையும் படிங்க - 3ம் வரிசையை விராட் கோலியிடமிருந்து தட்டிப்பறிக்கும் தரமான வீரர்..!

Tap to resize

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மந்தமாக பேட்டிங் ஆடிய ரிஸ்வான், 42 பந்தில் 43 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிஸ்வான், பந்துக்கு நிகரான ரன் அடித்ததால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

பாபர் அசாம் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததால் ரிஸ்வானால் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. ஏனெனில் பாபர் அசாம் ஆட்டமிழந்ததால் பொறுப்பு ரிஸ்வானின் தோள்களில் இறங்கியது. அதனால் அவரால் அவரது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடமுடியவில்லை. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் டாப் 3 பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், ரிஸ்வான், ஃபகர் ஜமான் ஆகிய மூவரையும் அதிகமாக சார்ந்திருப்பதே அந்த அணியின் பெரிய பிரச்னை. இவர்கள் மூவருமே/மூவரில் ஒருவரே அதிகமான பந்துகளை ஆடுகின்றனர். எனவே அவர்கள் எப்படி ஆடுகின்றனர் என்பதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமைகிறது. அவர்கள் நிறைய பந்துகள் ஆடி, ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாத அளவிற்கு பந்துக்கு நிகரான ரன் அடிக்கும்போது, அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இந்தியாவிற்கு எதிராக 42 பந்தில் 43 ரன்கள் அடித்த ரிஸ்வான், ஹாங்காங்கிற்கு எதிராக 57 பந்தில் 78 ரன்கள் அடித்து 20 ஓவர்களும் பேட்டிங் ஆடி ஆட்டமிழக்காமல் சென்றார். இன்னிங்ஸின் பாதி பந்துகளை அவரே பேட்டிங் ஆடியபோதிலும், 78 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் குஷ்தில் ஷா 15 பந்தில் 35 ரன்களை விளாசியதால் அந்த அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. ரிஸ்வான் ஒருமுனையில் நிலைத்து ஆடி விக்கெட்டை இழக்காமல் இருந்ததால் தான் பின்வரிசை வீரர்களுக்கு அடித்து ஆட லைசென்ஸ் கிடைத்தது என்பது உண்மையென்றாலும், ரிஸ்வானின் மந்தமான பேட்டிங்கை வாசிம் அக்ரமால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஹாங்காங்கிற்கு எதிரான இன்னிங்ஸில் ரிஸ்வான் பாதிக்கு மேல் பந்துக்கு நிகரான ரன்னே அடித்து 100 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடினார். அது வாசிம் அக்ரமை அதிருப்தியடைய செய்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், முகமது ரிஸ்வான் பந்துக்கு நிகரான ரன் அடித்து நாட் அவுட்டில் செல்வதன்மூலம் அணிக்கு என்ன பயன்..? அவர் அடித்து ஆடமுயன்று ஆட்டமிழந்தால் கூட, பின்னால் ஆசிஃப் அலி, இஃப்டிகார் அகமது, நவாஸ், ஷதாப்கான் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர். டி20 ஃபார்மட்டில் பந்துக்கு நிகராக ரன் அடித்து நாட் அவுட்டாக செல்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார். 

Latest Videos

click me!