IND vs PAK: தம்பி நீயெல்லாம் சரியா வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

First Published | Sep 4, 2022, 2:49 PM IST

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.
 

சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி துபாயில் நடக்கிறது. 

இதையும் படிங்க - Asia Cup: தனுஷ்கா குணதிலகாவை வம்பு இழுத்து அவுட்டாக்கிய ரஷீத் கான்.! களத்தில் சூடான வாக்குவாதம்.. வைரல் வீடியோ

Tap to resize

லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே இந்தியாவை பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தானும், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்தியாவும் களமிறங்குகின்றன.
 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படும். ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக அக்ஸர் படேல் ஆடுவார்.
 

லீக் சுற்றின் 2 போட்டிகளிலும் சோபிக்காத ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கானுக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவார். பாகிஸ்தானுக்கு எதிராக டெத் ஓவரில் ஆவேஷ் கானுக்கு பவுலிங் கொடுக்கப்படவில்லை. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 53 ரன்களை வாரி வழங்கினார் . டெத் ஓவர்களில் அவரது பவுலிங்கை எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்குகின்றனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகிய ரவீந்திர ஜடேஜா..! இந்திய அணிக்கு மரண அடி
 

புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளார். 

எனவே ஆவேஷ் கானுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவார். அஷ்வின் சேர்க்கை அணிக்கு பலம் சேர்க்கும். ஏற்கனவே சாஹல், அக்ஸர் படேல் இருப்பதால், அவர்களுடன் அஷ்வினும் இணைவது ஸ்பின் யூனிட்டிற்கு வலுசேர்க்கும்.
 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல்(துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
 

Latest Videos

click me!