ரவீந்திர ஜடேஜா ஸ்கை போர்டில் விளையாடியபோது காயமடைந்தது தெரியவந்திருக்கிறது. அக்கறையில்லாமல் அவர் காயமடைந்திருப்பதால் தான், டி20 உலக கோப்பையில் அவர் ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இந்திய அணியின் முக்கியமான வீரரான ஜடேஜா, பவுலிங், பேட்டிங் இரண்டிலும் சிறந்த பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால், அவரது இருப்பு அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும்.
25
டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஜடேஜா முக்கியமான வீரர். அப்படியிருக்கையில், ஆசிய கோப்பையின் இடையே காயமடைந்த ஜடேஜா, ஆசிய கோப்பையிலிருந்து விலகினார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
முழங்காலில் காயம் கடுமையாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அவர் டி20 உலக கோப்பையில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியானது. அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது. அவர் ஓய்வில் இருப்பதால் டி20 உலக கோப்பையில் ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
45
அவர் காயமடைந்த விதம் இந்திய அணிக்கும், பிசிசிஐக்கும் மட்டுமல்லாது, ரசிகர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி வீரர்கள் போட்டி தொடர்களுக்கு இடையே ரெஃப்ரெஷ் ஆவதற்காக கிரிக்கெட் அல்லாத சில பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். நீச்சல், ஷாப்பிங் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுவர். அப்படி நீச்சல் அடிக்கும்போது ஸ்கை போர்டை வைத்து விளையாடியபோது அவருக்கு முழங்காலில் ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிப்பட்டதால் தான், அவரது காயம் தீவிரமடைந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்துவருகிறார் ஜடேஜா.
டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், ஜடேஜாவின் அக்கறையற்ற செயல் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணி நிர்வாகம், பிசிசிஐ, ரசிகர்கள் என அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.