டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், அதே கருத்தைத்தான் ரோஹன் கவாஸ்கரும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ரோஹன் கவாஸ்கர், விராட் கோலி ஓபனிங்கில் ஆடுவது சிறந்த ஆப்சன். டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அபாரமாக ஆடியிருக்கிறார் கோலி. டி20 கிரிக்கெட்டில் ஓபனிங்கில் கோலியின் சராசரி 55-57 ஆகும். ஸ்டிரைக் ரேட் 160. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகக்கூட 122 ரன்களை குவித்தார். டி20யில் ஓபனிங்கில் ஆட விரும்புவதாக அவரே கூறியிருக்கிறார். எனவே அவர் ஓபனிங்கில் ஆடுவதை விரும்புகிறார் என்பது தெரிகிறது.
இதையும் படிங்க - முதல்ல அவரை ஆடவிடுங்க; அதுக்கு அப்புறம் விமர்சிங்க! T20 WC இந்திய அணியில் இடம்பிடித்த வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு
சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையில் ஆடவேண்டும். விராட் கோலி தான் ஓபனிங்கில் இறங்க வேண்டும். எனக்கு ரொம்ப பிடித்த வீரர் கேஎல் ராகுல். ஆனால் கேஎல் ராகுல் இப்போது அவரது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் என்று ரோஹன் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.