IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!

Published : Dec 04, 2025, 02:31 PM IST

IND vs SA 3rd ODI: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது ஓடிஐ

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியில் விராட் கோலி (102 ரன்), ருத்ராஜ் கெய்க்வாட் (105 ரன்) சூப்பர் சதம் விளாசினார்கள். பின்பு விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்தது. அந்த அணி வீரர் மார்க்ரம் (110 ரன்கள்) அதிரடி சதம் விளாசினார்.

24
இந்திய அணியில் 2 மாற்றங்கள்

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டணத்த்தில் 6ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதாவது முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படுகிறார். இதேபோல் 2வது போட்டியில் 8 ஓவர்களில் 85 ரன்களை வாரி வழங்கிய பாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணாவும் நீக்கப்பட உள்ளார்.

34
நிதிஷ்குமார் ரெட்டி, ரிஷப் பண்ட்

பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டியும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது திலக் வர்மா அணியில் இடம் பிடிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. முதல் இரண்டு போட்டியிலும் சொதப்பிய ஜெய்ஸ்வாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 அவர் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்குவார். விராட் கோலி வழக்கம்போல் ஒன் டவுனில் களம் காண்பார். 4வது வரிசையில் சத நாயகன் ருத்ராஜ் கெய்க்வாட் களமிறங்குவார்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்

இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அல்லது திலக் வர்மா, ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி பேட்டிங் செய்வார்கள். பவுலிங்கை பொறுத்தவரை ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர். பாஸ்ட் பவுலிங்கில் ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி உள்ளனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருத்ராஜ் கெய்க்வாட், திலக் வர்மா அல்லது ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

Read more Photos on
click me!

Recommended Stories