அக்சர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் நன்றாக பந்துவீசினார்கள். ஹர்சித் ராணாவின் பந்துவீச்சு எதிர்பார்த்த படி சிறப்பாக அமையவில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஓடிஐ போட்டி அடிலெய்டு மைதானத்தில் நாளை (23ம் தேதி) நடைபெறுகிறது. இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்சித் ராணா வெளியே; குல்தீப் உள்ளே
அதாவது கடந்த ஆட்டத்தில் இடம்பெறாத குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனுக்குள் வரலாம். எதிர்பார்த்த பந்துவீச்சை பதிவு செய்யாத ஹர்சித் ராணா அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. முதல் ஓடிஐயில் சரியாக விளையாடவில்லை என்றாலும் ரோகித், கோலி இடங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. சிராஜ், அர்ஷ்தீப் என 2 பாஸ்ட் பவுலர்கள், நிதிஷ் ரெட்டி மித வேகம், அக்சர், குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்ற 3 ஸ்பின்னர்கள் என்ற கலவையில் இந்திய அணி விளையாடும்.