சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தானின் ஷோயிப் அக்தர் (161.3 கி.மீ) வைத்திருக்கிறார். ஸ்டார்க் வீசிய இந்தப் பந்து உண்மையாகவே 176.5 கி.மீ வேகத்தில் சென்றிருந்தால், அது அக்தரின் 22 ஆண்டுகால சாதனையைத் தகர்த்திருக்கும்.
இருப்பினும், பந்துவீச்சின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாகப் பதிவானதால், இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கிரிக்கெட் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பந்தின் உண்மையான வேகம் குறித்து தெளிவான தகவல் இல்லை என்றாலும், ஸ்டார்க் தனது வேகப்பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.
வேகக் கண்காணிப்புக் கருவியின் பிழையே இதற்குக் காரணம் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளபோதும், இந்த அதிவேகப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி கிரிக்கெட் உலகில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.