ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி விரைவில் அவுட்டாகி வெளியேறியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 50 ஓவர் ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
24
ரோகித் சர்மா ஏமாற்றம்
ரோகித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் ஆடினார். 14 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 8 ரன் மட்டுமே அடித்த ரோகித் ஹேசில்வுட் பந்தில் ரென்ஷாவிடம் கேட்ச் ஆனார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் 7 மாதங்களுக்கு பிறகு விராட் கோலி களமிறங்கினார்.
34
விராட் கோலி டக் அவுட்
ரோகித் ஏமாற்றினாலும் விராட் சூப்பராக விளையாடுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 8 பந்துகளை சந்தித்த விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் கோனோலியின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார். இதனால் கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். 'ரோ கோ' என ரசிகர்களால் அழைக்கப்படும் ரோகித், கோலி 7 மாதங்களுக்கு பிறகு திரும்பியதால் சிறப்பாக விளையாடுவர்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருவரும் வந்த வேகத்தில் அவுட்டாகி சென்றது போட்டியை மைதானத்தில் அமர்ந்து நேரில் பார்த்த ரசிகர்களும், டிவியில் பார்த்த ரசிகர்களும் சோகமடைந்தனர். ரசிகர்கள் தங்கள் வேதனையை சமூகவலைத்தளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதன்பின்பு கேப்டன் சுப்மன் கில்லும் 10 ரன்னில் எல்லீஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இந்திய அணி இப்போது வரை 8.5 ஓவரில் 25/3 என தடுமாறி வருகிறது.