ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா

First Published | May 2, 2023, 4:08 PM IST

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
 

டெஸ்ட் தவரிசையை வெளியிட்டுள்ளது ஐசிசி. 2020ம் ஆண்டு மே முதல் 2022ம் ஆண்டு மே வரையிலான போட்டி முடிவுகளின் அடிப்படையில் 50 சதவிகிதமும், 2022 முதல் இப்போது வரையிலான போட்டி முடிவுகளின் அடிப்படையிலும் டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

அதனால் 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகள் குறைந்து 116 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு இறங்கிவிட்டது. 119 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருந்த இந்திய அணி, 2020 - 2022 வரையிலான போட்டிகளை கணக்கில் கொண்டு தரவரிசை பட்டியலிடப்பட்டதால் 121 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 3ம் இடத்தில் உள்ளது.

IPL 2023: 10 ஆண்டுக்கு பின் மீண்டும் களத்தில் மோதிக்கொண்ட கம்பீர் - கோலி..! 2 பேருக்கும் அப்படி என்னதான் பகை.?
 


2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெற்றி விகிதங்களின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் தான் வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன.

IPL 2023: எல்லாம் கைமீறி போய்டுச்சு; இனி DCக்கு இழக்க எதுவுமில்லை..! GT vs DC அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஐசிசி டி20 தரவரிசையில் 267 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும், 259 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 2ம் இடத்திலும் உள்ளன. 3, 4, 5ம் இடங்களில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன. டி20 தரவரிசையில் டாப் 5ல் ஆஸ்திரேலிய அணி இடம்பெறவில்லை.

Latest Videos

click me!