ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸும், கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.
25
இதுவரை ஆடிய 8 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பேயில்லை. எனவே இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால், துணிச்சலுடன் களமிறங்குகிறது டெல்லி கேபிடள்ஸ் அணி.
35
அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோலவே இனி இழப்பதற்கு இந்த சீசனில் எதுவுமில்லை என்ற நிலையில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி காம்பினேஷனிலும் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.