ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய 43ஆவது போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
பவர்பிளே என்று சொல்லக் கூடிய முதல் 6 ஓவருக்கு ஆர்சிபி அணி 42 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இறங்கி அடிக்கிறேன் என்ற பெயரில் விராட் கோலி, ரவி பிஷ்னாய் பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேஷாய், வணிந்து ஹசரங்கா, கரண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹசல்வுட்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹாக், அமித் மிஸ்ரா மற்றும் யாஷ் தாகூர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
விராட் கோலி 43 ரன்கள் சேர்த்தால் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 3 பவுண்டரி அடங்கும். அடுத்து வந்த அனுஜ் ராவத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேஎல் ராகுலுக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வெளியில் சென்றார்!
போட்டியின் 15.2 ஓவரின் போது மழை குறுக்கீடு இருந்தது. அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு பின் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது வந்த தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்தார். இதன் மூலமாக 44 பந்துகளுக்குப் பிறகு ஒரு பவுண்டரி வந்துள்ளது. இந்த பவுண்டரியைத் தொடர்ந்து ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டார்.
மழை குறுக்கீடு காரணமாக போட்டி நிறுத்தம்: 15.2 ஓவர்களில் ஆர்சிபி 92 ரன்கள்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஒருகட்டத்தில் பொறுமையாக ஒவ்வொரு ரன்னாக எடுத்து வந்த பாப் டூப்ளெசிஸ் 40 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் குர்ணல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் அவர் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் மட்டுமே அடித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
அடுத்து தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ரன் அவுட்டாக, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.