உன்னுடைய பைத்தியக்காரத்தனத்தின் மூலமாக உன்னை நேசிக்கிறேன் -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விராட் கோலி!

First Published | May 1, 2023, 3:57 PM IST

விராட் கோலி தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா பிறந்தநாள்

கிரிக்கெட்டில் எப்படி விராட் கோலி கிங்காக இருக்கிறாரோ அதே போன்று சினிமாவில் கொடி கட்டி பறப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் எப்போதும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் தான் பொழுதை கழிப்பார்.

அனுஷ்கா சர்மா பிறந்தநாள்

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். போட்டி இல்லாத நேரங்களில் மனைவியுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது, ரெஸ்டாரண்டிற்கு செல்வது, கடகறைக்கு செல்வது என்று மனைவிக்கு என்று நேரம் செலவிட்டு வருவார்.

Tap to resize

அனுஷ்கா சர்மா பிறந்தநாள்

இந்த நிலையில், அனுஷ்கா சர்மா இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு காதல் கணவரான விராட் கோலி டுவிட்டர் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தடித்த, மெல்லிய மற்றும் உங்கள் அழகான பைத்தியக்காரத்தனத்தின் மூலம் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய எல்லாமுமான உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்கா சர்மா பிறந்தநாள்

வெறும் வார்த்தையால் பிறந்தநாள் வாழ்த்து கூறிய விராட் கோலி இன்று லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்து அதனை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அனுஷ்கா சர்மா பிறந்தநாள்

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!