சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 41ஆவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சென்னை அணியில் கான்வே 92 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
ருத்துராஜ் கெய்க்வாட் 37 ரன்களில் வெளியேறினார். ஷிவம் துபே 28 ரன்கள் சேர்த்தார். மொயீன் அலி 10 ரன்னும், ஜடேஜா 12 ரன்னும் எடுத்தனர். கடைசியாக வந்த தோனி 2 சிக்ஸர்கள் விளாச இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரரர்கள் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ப்ராப்சிம்ரன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டன் 40 ரன்களில் ஆட்டமிழதார். கடைசியாக வந்த ஷாருக்கான் மற்றும் ஷிகந்தர் ராஸா இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3ஆவது பந்தில் ரன் ஏதும் இல்லை. 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தில் 2 ரன்னும் எடுக்கப்பட்டது. கடைசியாக ஒரு பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஸா 3 ரன் எடுக்கவே பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இறுதியாக சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. கேப்டன்ஷியில் தோனி செய்த தவறு தான் காரணமாக பார்கப்படுகிறது. முதலில் ஆடிய சென்னை அணியில் அஜிங்கியா ரஹானே இறக்கப்படவில்லை. அதே போன்று பவர்பிளேயில் 6 ஓவருக்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும் குறைந்த ரன்களே பவர்பிளேயில் சிஎஸ்கே எடுத்திருந்தது. பேட்டிங்கைப் பொறுத்த வரையில் மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடைசி நேரத்தில் சொதப்பிவிட்டனர். இதன் காரணமாக சிஎஸ்கே 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதே போன்று கேப்டன்ஷியில் தோனியும் பெரிய தவறு செய்துவிட்டார். அதாவது, கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜாவிற்குப் பதிலாக பதிரானாவிடம் கொடுத்திருக்க வேண்டும். ஜடேஜாவின் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. ஆனால், பதிரானா ஓவரில் முதல் பந்திலேயே சாம் கரண் ஆட்டமிழந்தார். இப்படி சில மாற்றங்களை தோனி தனது கேப்டன்ஷியில் செய்திருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.