மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சீசனின் 42ஆவது போட்டியும், ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் மட்டும் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
அவர், 62 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் உள்பட 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் அர்ஷாத் கான் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மெரிடித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹிட்மேன் ரோகித் சர்மா பிறந்தநாள் டிரீட் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
அதன்பிறகு வந்த கேமரூன் க்ரீன் 44 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷான் 28 ரன்களில் வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து வந்த திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேசன் ஹோல்டர் 20ஆவது ஓவரை வீசினார். அவரது முதல் பந்தில் டிம் டேவிட் சிக்ஸர் விளாசினார். 2ஆவது பந்திலும் சிக்ஸருக்கு பறக்க விட்டார். கடைசியாக 3ஆவது பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டியில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
8 போட்டிகளில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.