வார்னர் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், இனிமேல் இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியால் கம்பே க் கொடுக்க முடியாது. அவர் ஃபார்மில் இல்லாததால் ஒரு பேட்ஸ்மேனாக அவரது சிறப்பான பங்களிப்பை கொடுக்கவில்லை. ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் சீக்கிரம் அவுட்டானதால் தான், டெல்லி அணி இலக்கை நெருங்கவாவது செய்தது. வார்னர் 50 பந்துகள் ஆடியிருந்தால் 50 பந்துகள் வீணாகியிருக்கும். டெல்லி அணி 50க்கும் மேற்பட்ட ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்கும். இந்த சீசனில் இதுவரை 300 ரன்களுக்கு மேல் வார்னர் அடித்திருக்கிறார். ஆனால் ஸ்டிரைக் ரேட் மோசமாக இருப்பதால், அவர் அடித்த ரன்களால் டெல்லி அணிக்கு பிரயோஜனமே இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.