இந்த சரிவில் இருந்து பாகிஸ்தான் அணியால் மீளவே முடியவில்லை. நமது வீரர்களின் பாஸ்ட் பவுலிங் மற்றும் ஸ்பின் பவுலிங் என எதையும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் மட்டும் போராடி 44 ரன்கள் அடித்தார். மற்ற யாரும் சோபிக்கவில்லை. இதில் 3 பேர் டக் அவுட் ஆனதும் அடங்கும். முடிவில் பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பேசமா ஊர்லயே இருந்திருக்கலாமோ..
இந்திய அணி தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், திலக் வர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.
இந்த போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி வந்தது. பின்னர் ஐசிசியின் மிரட்டலுக்கு பணிந்து விளையாடியது. இப்படி படுமோசமாக தோற்றத்துக்கு நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம் என இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கிண்டலடித்து வருகின்றனர்.