10ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. பின்னணி காரணம் இதுதான்!

Published : Feb 15, 2026, 07:13 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வீரர் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு தேர்வு எழுத வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். இதற்கான பின்னணி காரணம் குறித்து பார்க்கலாம். 

PREV
13
10ஆம் வகுப்பு தேர்வு எழுதாத வைபவ் சூர்யவன்ஷி

U19 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்த வைபவ் சூர்யவன்ஷி, 10ஆம் வகுப்பு தேர்வு எழுதப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். பீகாரில் உள்ள பள்ளியில் படிக்கும் 15 வயது வைபவ், பிப். 17ல் தொடங்கும் தேர்வை எழுத போகவில்லை.

 வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லை. பள்ளியில் அவரது வருகைப்பதிவு குறைவாக இருந்தாலும், பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. ஹால் டிக்கெட்டும் கைக்கு வந்துவிட்டது.

23
தேர்வு எழுத முடிவெடுக்காதது ஏன்?

ஆனாலும் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதவில்லை என அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி கூறியுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் வகுப்புகளுக்கு செல்லாததால், பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.

 அதனால் தேர்வு எழுதவில்லை. தொடர் போட்டிகளால் வைபவ்வால் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்வுக்கான விண்ணப்பம் நிரப்பப்பட்டிருந்தது. தேர்வு மையமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் சரியாக படிக்காததால் தேர்வு எழுத செல்லவில்லை என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

33
இந்திய அணியின் அதிரடி மன்னன் வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி U-19 உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 439 ரன்கள் குவித்தார். ஒரே உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸின் சாதனையை முறியடித்தார்.

 U-19 ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் வைபவ். 25 இன்னிங்ஸ்களில் 4 சதங்களுடன் 1,412 ரன்கள் எடுத்துள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories