IND vs PAK: இந்தியா முதலில் பேட்டிங்.. பாக்., கேப்டனை புறக்கணித்த சூர்யகுமார் யாதவ்! அதை கவனீச்சிங்களா?

Published : Feb 15, 2026, 06:57 PM IST

T20 WC IND vs PAK: டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளின் கேப்டன்களும் வழக்கம்போல் கைகுலுக்கவில்லை.

PREV
14
இந்தியா, பாகிஸ்தான் போட்டி

டி20 உலகக்கோப்பையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்பு பிரேமதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

24
இந்திய அணியில் 2 மாற்றங்கள்

அதாவது உடல்நலக்குறைவு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத அபிஷேக் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அந்த போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். இதேபோல் பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூப்பர் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

34
இரு அணியின் கேப்டன்களும் கைகுலுக்கவில்லை

கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும்போது இரு அணிகளின் கேப்டன் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இன்றைய போட்டியில் டாஸ் போடும்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை. ஆசியக் கோப்பையிலும் இந்திய-பாக் கேப்டன்கள் கைகுலுக்கவில்லை. இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை. இது டி20 உலகக்கோப்பையில் தொடர்கிறது.

44
இந்தியா, பாகிஸ்தான் பிளேயிங் லெவன்

இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ்.

பாகிஸ்தான் அணி பிளேயிங் லெவன்: சல்மான் ஆகா (கேப்டன்), சயிம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், பாபர் அசாம், உஸ்மான் கான், ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக் மற்றும் அப்ரார் அகமது.

Read more Photos on
click me!

Recommended Stories