நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெளுத்து கட்டிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்து டி20 போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கேரளாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல இந்த போட்டியிலும் அதிரடி காட்டிய தொடக்க ஆட்டக்காரர் அபிசேக் ஷர்மா 16 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார். மறு முனையில் உள்ளூர் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் வெறும் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.
23
வானவேடிக்கை காட்டிய இசான் கிஷன்
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இசான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடக்கத்தில் சீரான வேகத்தில் ரன் சேர்க்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியைத் தொடங்கிய இந்த ஜோடி நியூசிலாந்து பௌலர்களை பொளந்து கட்டத் தொடங்கினர். எந்த பந்தைப் போட்டாலும் சிக்சர், பவுண்டரி என பவுண்டரிகளைப் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினர். தொடர்ந்து அதிரடி காட்டிய இசான் கிஷன் வெறும் 42 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மொத்தமாக 10 சிக்சர்கள், 6 பவுண்டரிகளைத் தெறிக்கவிட்டார்.
33
டி20யில் அதிகபட்ச ஸ்கோர்
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டர்கள் பறக்கவிட்டு 60 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 4 சிக்சர்கள், 1 பவுண்டரி விளாசி 42 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. டி20 வரலாற்றில் இந்திய அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.