அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தை தடுக்க அதிரடி புயலை களம் இறக்கும் நியூசி..

Published : Jan 27, 2026, 09:30 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில் அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த நியூசிலாந்து அந்த அணியின் அதிரடி பந்துவீச்சாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. 

PREV
15
இந்தியா-நியூசிலாந்து நான்காவது டி20

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் 3-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

25
ஆக்ரோஷ பந்துவீச்சாளர் வருகை

மீதமுள்ள 2 டி20 போட்டிகளுக்காக நியூசிலாந்து அணியில் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் அற்புதமான சாதனை படைத்துள்ள இவர், இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார்.

35
அபிஷேக்கிற்கான புது யுக்தி

அதிரடி ஃபார்மில் உள்ள அபிஷேக் சர்மா, கடந்த போட்டியில் 20 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் கிவி பந்துவீச்சாளர்கள் திணறினர். எனவே, அவரை சமாளிக்க நியூசிலாந்து அணி பெர்குசனை களமிறக்கியுள்ளது.

45
வேகப்பந்து வீச்சு எக்ஸ்பிரஸ் பெர்குசன்

லாக்கி பெர்குசன் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டவர். இவரது வேகம் மற்றும் யார்க்கர்கள் அபிஷேக் சர்மாவுக்கு நெருக்கடியை உருவாக்கும். டி20 உலகக் கோப்பையில் இவர் படைத்த சாதனை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நினைவிருக்கும்.

55
அபிஷேக்கும் சளைத்தவர் அல்ல

இருப்பினும், அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம் பெர்குசனுக்கு சவாலாக அமையும். எந்த வேகப்பந்து வீச்சாளரையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் திறன் அபிஷேக்கிற்கு உள்ளது. பெர்குசனின் சிறிய தவறும் சிக்ஸராக மாற வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories