T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!

Published : Jan 26, 2026, 10:00 PM IST

இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்த வங்கதேச அணியை பாகிஸ்தான் தவறாக வழிநடத்தியுள்ளது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். 

PREV
13
டி20 உலகக்கோப்பை 2026

வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்கள் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து பிசிசிஐ உத்தரவுப்படி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருந்து நீக்கியது. 

இதனால் பொங்கியெழுந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேண்டுமென்றே கூறி இலங்கையில் போட்டியை மாற்ற விரும்பியது.

23
வங்கதேச அணி விலகியது

இது தொடர்பாக ஐசிசி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கதேசம் கேட்கவில்லை. வங்கதேசம் இந்தியாவுக்கு விளையாட வரவில்லை என்றால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்படும் என ஐசிசி ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. 

ஆனாலும் இந்தியா வர முடியாது என வங்கதேசம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு பதில் ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்த்தது.

வங்கதேசத்துக்கு பதில் ஸ்காட்லாந்து

இந்த நிலையில், வங்கதேச அணி இந்தியா வருவதை பாகிஸ்தான் தடுத்தது என்று பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய ராஜீவ் சுக்லா, ''வங்கதேச அணி இந்தியாவில் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். 

அந்த அணிக்கான முழு பாதுகாப்பையும் உறுதி செய்தோம். ஆனால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதால், கடைசி நேரத்தில் முழு அட்டவணையையும் மாற்றுவது மிகவும் கடினம். இதனால்தான் ஸ்காட்லாந்து கொண்டுவரப்பட்டது'' என்றார்.

33
பாகிஸ்தான் தான் காரணம்

தொடர்ந்து பேசிய ராஜீவ் சுக்லா, ''பாகிஸ்தான் இந்த விஷயத்தில் எந்த காரணமும் இல்லாமல் தலையிட்டு வங்கதேசத்தை தூண்டிவிடுகிறது. வங்கதேசம் மக்கள் மீது பாகிஸ்தான் செய்த கொடுமைகள் அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. இது முற்றிலும் தவறு" என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories