டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார். அவர் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு அடுத்த இடத்தில் அபிஷேக் சர்மா உள்ளார்.
டி20 வரலாற்றில் இந்தியாவின் டாப் 5 அதிவேக அரைசதங்கள்.. பட்டியலில் யார் யார்?
டி20 கிரிக்கெட் என்றாலே பவுண்டரிகளின் மழைதான். இந்த குறுகிய வடிவத்தில், பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட முயற்சிப்பார்கள். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
26
1. யுவராஜ் சிங் – 12 பந்துகள்
2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங் உலக சாதனை படைத்தார். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி வரலாறு படைத்தார்.
36
2. அபிஷேக் சர்மா – 14 பந்துகள்
இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்து, யுவராஜின் சாதனையை நெருங்கினார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
56
4. அபிஷேக் சர்மா – 17 பந்துகள்
டாப்-5 பட்டியலில் இரண்டு முறை இடம்பிடித்த ஒரே இந்திய வீரர் அபிஷேக் சர்மா. இங்கிலாந்துக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
66
5. கே.எல். ராகுல் – 18 பந்துகள்
2021 டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்திற்கு எதிராக கே.எல். ராகுல் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, தனது அதிரடி திறமையை வெளிப்படுத்தினார். இது உலகக் கோப்பையில் ஒரு சிறப்பான இன்னிங்ஸ்.