IND vs NZ T20 தொடர் முழுவதும் பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் படுமோசமாக செயல்பட்டு வருகிறார் சஞ்சு சாம்சன். கையில் கிளவுஸ் இருந்தும் எளிதாக பிடிக்க வேண்டிய பந்துகளையும் விட்டு விடுகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்பு விளையாடிய இந்திய அணி வெறும் 10 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்து மெகா வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 68 ரன்களும், சூர்யகுமார் 26 பந்துகளில் 57 ரன்களும் அடித்தனர். 4 ஓவர்கள் வீசி 17 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்த பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார்.
24
சஞ்சு சாம்சன் படுமோசமான பேட்டிங்
இந்த தொடர் முழுவதும் சொதப்பி வரும் சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி ரன்கள் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 10 ரன்கள் மட்டுமே அடுத்து அவுட் ஆன சஞ்சு சாம்சன், 2வது டி20 போட்டியிலும் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இன்று 3வது டி20 போட்டியிலும் டக் அவுட்டாகி கடுமையாக சொதப்பியுள்ளார்.
விக்கெட் கீப்பிங்கிலும் சஞ்சு சொதப்பல்
இந்த தொடர் முழுவதும் பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் படுமோசமாக செயல்பட்டு வருகிறார் சஞ்சு சாம்சன். கையில் கிளவுஸ் இருந்தும் எளிதாக பிடிக்க வேண்டிய பந்துகளையும் விட்டு விடுகிறார்.
இதனால் பந்து கீப்பருக்கு பின்னால் பவுண்டரிக்கு சென்று விடுகிறது. எளிதான ரன் அவுட் வாய்ப்பையும் வீணடித்தார். இப்போதைய இந்திய அணியின் டி20 தொடரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.
34
நீக்கப்படும் சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் நிரந்தர டி20 பேட்ஸ்மேன் திலக் வர்மா காயம் அடைந்ததால் அவரது இடத்தில் விளையாடிய இஷான் கிஷன் இரண்டு போட்டிகளில் அதிரடியில் பட்டயை கிளப்பி விட்டார். இதனால் 4வது போட்டிக்கு திலக் வர்மா உள்ளே வந்தால் இஷான் கிஷன் இடம் பறிபோகாது.
சஞ்சு சாம்சன் இடம் தான் பறிபோவது உறுதியாகி விட்டது. இஷான் கீப்பராகவும் உள்ளதால் அவருக்கு பிரச்சனை இல்லை. இதேபோல் மற்றொரு அதிரடி வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் சஞ்சு சாம்சனின் மோசமான பார்ம் ஷ்ரேயாஸ் உள்ளே வருவதற்கு வழிவகுத்துள்ளது. ஷ்ரேயாஸை போன்று ஏராளமான இளம் வீரர்கள் டி20 அணிக்கு வர ரெடியாக உள்ளனர். ஆனால் பிசிசிஐ சஞ்சு சாம்சனுக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுத்ததுடன், டி20 உலகக்கோப்பையிலும் இடம் கொடுத்தது. ஆனால் சஞ்சு தனது வாய்ப்புகளை எல்லாம் வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.