நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி மெகா வெற்றி பெற்று தொடரையும் வென்று கைப்பற்றி அசத்தியுள்ளது. அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து மாஸ் காட்டினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் வென்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 17 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 18 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
23
அபிஷேக் சர்மா 14 பந்தில் அரை சதம்
பின்பு விளையாடிய இந்திய அணி வெறும் 10 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்து பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. சிக்சர் மழை பொழிந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வெறும் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் அதிவேக அரை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். பார்ம் இன்றி தவித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2வது அரை சதம் அடித்து மாஸ் காட்டினார்.
33
சூர்யகுமார் மாஸ் பேட்டிங்
அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக திகழ்ந்தார். சூர்யகுமார் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.