டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கிரிக்கெட் அரசியல் சூடுபிடித்துள்ளது. வங்கதேசம் போட்டியிலிருந்து விலகிய நிலையில், பாகிஸ்தானும் அதே முடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிபி தலைவர், ஐசிசி மற்றும் இந்தியா மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசம் விலகல், பாகிஸ்தானுக்கு ஏன் கோபம்?
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவுக்கு வர மறுத்த வங்கதேசம், போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியது. ஆனால் வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி மறுத்ததால், உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
25
மொஹ்சின் நக்வி ஐசிசி மீது கேள்வி எழுப்பியது ஏன்?
ஐசிசி இரட்டை வேடம் போடுவதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி குற்றம் சாட்டினார். 'வங்கதேசத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டிற்கு (இந்தியாவுக்கு) மட்டும் சலுகை ஏன்?' என அவர் கேள்வி எழுப்பினார்.
35
பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பை 2026-ஐ புறக்கணிக்குமா?
இதுகுறித்து மொஹ்சின் நக்வி, 'பாகிஸ்தான் அரசின் முடிவை நாங்கள் ஏற்போம். பிரதமர் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் இறுதி முடிவு எடுக்கப்படும் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து முடிவெடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றால் மாற்று திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, 'எங்களிடம் பிளான் ஏ, பி, சி, டி தயாராக உள்ளது' என நக்வி கூறினார். ஒரு நாடு மற்றொன்றின் மீது விதிகளை திணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
55
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது, எங்கே?
டி20 உலகக் கோப்பை 2026-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.